close
Choose your channels

ஆக்சன் காட்சிகளுக்காக ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காஜல் அகர்வால்!

Thursday, April 15, 2021 • தமிழ் Comments

ஹீரோக்களுக்கு இணையாக தற்போது ஹீரோயின்களும் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் ஒரு சிலர் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது ஆக்ஷன் படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் ஸ்டண்ட் காட்சிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கும் அடுத்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவர் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக காஜல் அகர்வால் தற்போது ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவருக்கு இந்த பயிற்சியை ஜெகன் மாஸ்டர் கற்றுத்தந்து கொண்டிருப்பதாகவும் இயக்குனர் கல்யாண் தெரிவித்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தில் ஆரத்தி என்ற போலீஸ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் இந்த படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து உள்ளதாகவும் கூறிய இயக்குனர், கடந்த பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதாகவும் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட கொண்டிருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு ஜோடி இல்லை என்றும் அவருடன் ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், கேஎஸ் ரவிக்குமார், யோகிபாப, சுரேஷ் மேனன், மயில்சாமி, மனோபாலா ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz