close
Choose your channels

மீண்டும் துப்பாக்கி டைட்டிலில் கலைப்புலி தாணு

Saturday, December 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு 'தெறி' மற்றும் 'கபாலி' படங்களையும் இந்த ஆண்டு 'இந்திரஜித்' படங்களையும் தயாரித்து ரிலீஸ் செய்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'துப்பாக்கி முனை' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தையும் தாணு தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்பிரபு நாயகனாக நடித்து வரும் இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் என்பவர் இயக்கி  வருகிறார். ராசாமதி ஒளிப்பதிவில், எல்.வி.முத்துகணேஷ் இசையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பாடல்களை புலமைப்பித்தன் எழுதுகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.