close
Choose your channels

தனுஷின் 'நானே வருவேன்': செம அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு

Monday, September 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'நானே வருவேன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் அல்லது டீஸர் மற்றும் சில அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் கலைப்புலி எஸ் தாணு அவர்கள்’நானே வருவேன்’ படத்தின் செம அப்டேட்டை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகமாக உள்ளது.

’நானே வருவேன்’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த அப்டேட் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்தில் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படம் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.