close
Choose your channels

தேர்தலுக்காக கமல்ஹாசன் செலவு செய்தது இந்த பணம் தானா? 

Saturday, May 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் மனங்கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று என்பதும் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும், சிம்பு தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கமல்ஹாசன்தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளதாகவும், இதற்கான அட்வான்ஸ் பணத்தை அவர் கடந்த மார்ச் மாதமே பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய பிரமுகர் ஒருவர் அளித்த பேட்டியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அட்வான்ஸ் தொகையை கமல்ஹாசன் பெற்றுதான் தேர்தல் செலவு செய்தார் என்று கூறியிருந்தார். இதிலிருந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.