close
Choose your channels

இயக்குனருக்கு சொகுசுக்கார், உதவி இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கௌரவப்படுத்தும் வகையில் அவருக்கு லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த காரின் மதிப்பு சுமார் 75 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனரை அடுத்து இந்தப் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கும் கமல்ஹாசன் தனது அன்பு பரிசை வழங்கி உள்ளார். 'விக்ரம்’ படத்தில் உதவி இயக்குனர்களாகபணிபுரிந்த 13 பேர்களுக்கு பைக்குகளை கமல் பரிசாக வழங்கியுள்ளார்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 என்ற மாடல் பைக்கை கமல்ஹாசன் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் விலை சுமார் ரூ.78,000 என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்னும் இந்த படத்தில் பணிபுரிந்த பிற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கமல்ஹாசன் விரைவில் தனது அன்பு பரிசை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.