close
Choose your channels

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே: கமல்ஹாசனின் காதலர் தின மெசேஜ்!

Sunday, February 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி இன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் காதலர் தினம் குறித்த வாழ்த்துக்கள் அடங்கிய ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 80களில் காதல் மன்னன் என்ற பட்டத்தை பெற்றவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் காதலர் தின மெசேஜ் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவு செய்த இருப்பதாவது: காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.