close
Choose your channels

வேட்டை தொடங்குற நேரம், சிங்கத்தோட இன்னொரு இளசிங்கமும் சேர்ந்துச்சு: 'விக்ரம்' 100வது நாள் சக்ஸஸ் வீடியோ

Monday, September 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் சமீபத்தில் இந்த படம் நூறாவது நாள் என்ற மைல்கல்லை எட்டியது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் ‘விக்ரம்’ திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை செய்ததை அடுத்து படக்குழுவினர் 2 நிமிட வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் முதல் முதலாக ’ஆரம்பிக்கலாமா? என்ற டீசரின் காட்சிகள் முதல் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் காட்சிகள் வரை இடம்பெற்றுள்ளன

குறிப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடிவு வரையிலான காட்சிகள் இந்த இரண்டு நிமிட வீடியோவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த படத்தில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடிப்பதை குறிக்கும் வகையில் சிங்கத்துடன் இன்னொரு இளம் சேர்ந்தது என்ற வசனமும், இந்த படத்தை திரையரங்குகளில் கொண்டுபோய் சேர்க்க ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் உதவியது ஆகிய வசனமும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.