close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்': மாஸ் புரமோ வீடியோ

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் கமல்ஹாசனின் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

‘மாநகரம்’, ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ என மூன்று தொடர் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கிய அடுத்த படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும்போது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட அனுபவமாக உள்ளது. அந்த வகையில் ’இயக்குனரின் கதை’ என்ற டைட்டிலில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

45 விநாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்த காட்சிகளை லோகேஷ் கனகராஜ் படமாக்கிய விதம் குறித்த காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை பார்க்கும் போது உடனடியாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு வருவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஷ் உத்தமன், காயத்ரி ஷங்கர், ஷிவானி நாராயணன், ஷான்வி ஸ்ரீவத்சவா, ஜி மாரிமுத்து, ரமேஷ்திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.