close
Choose your channels

ரஜினிக்கு போன் செய்து பேசிய கமல்ஹாசன்.. என்ன பேசினார்கள்?

Monday, August 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை உலக நாயகன் கமல்ஹாசன் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் நான்கே நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் ’ஜெயிலர்’ பட வெற்றிக்கு கோலிவுட் திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை போனில் தொடர்பு கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதேபோல் இயக்குனர் நெல்சன் இடமும் தனது வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 50 ஆண்டுகளாக நட்புடன் இருக்கும் நிலையில் ஒருவர் படத்தின் வெற்றியை இன்னொருவர் பாராட்டி வருவது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.