close
Choose your channels

மீண்டும் சிவாஜி குடும்பத்துடன் இணையும் கமல்ஹாசன்

Monday, May 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் ராம்குமாரின் ஈஷான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 'மீன் குழம்பும் மண்பானையும்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ச் பணிகள் நடைபெற்று வருவதை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி வரும் 28ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள உலகநாயகன் கமல்ஹாசனுக்கு படக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் கமல்ஹாசன் கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் மீண்டும் பாடல்கள் ரிலீஸ் விழாவிலும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காளிதாஸ் ஜெயராம், ஆஸ்னா ஜாவேரி, பிரபு, பூஜா குமார், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அமுதேஷ்வர் என்பவர் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பாளராக கெவின் அவர்களும் பணியாற்றியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.