close
Choose your channels

கார்த்தி-பாண்டிராஜ் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்லுக் வெளியீடு

Monday, January 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'கடைக்குட்டி சிங்கம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டிலுக்கு கீழே 'பயிர் செய்ய விரும்பு' என்ற வாசகம் இருப்பதால் இந்த படம் விவசாயி பிரச்சனைகள் குறித்த படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் கார்த்தி உட்கார்ந்திருக்கும் பைக்கின் நம்பர் பிளேட்டில் நம்பருக்கு பதிலாக 'விவசாயி' என்ற வார்த்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தெலுங்கு ஃபர்ஸ்ட்லுக்கும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக 'வனமகள்' நாயகி சாயிஷா நடித்து வருகிறார். டி.இமான் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் வரும் சித்திரை மாதம் இந்த படம் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.