close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அம்மாவுடன் நடித்த பிரபல நடிகை

Wednesday, February 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தின் நாயகியான கல்யாணி பிரியதர்ஷன் தற்போது சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய விளம்பர படம் ஒன்றில் கல்யாணி பிரியதர்ஷனியும் அவரது தாயார் லிசியும் நடித்துள்ளனர். சென்னையின் புகழ்பெற்ற ஒரு ஜவுளி நிறுவனத்தின் இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளதாகவும், பெண்களை கவரும் வகையில் இந்த விளம்பரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த விளம்பரப்படம் விரைவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.