close
Choose your channels

'வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை'.. கவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Monday, August 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கவின் நடித்த 'டாடா’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கவின் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ‘ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவும், பிரதீப் ராகவ் படத்தொகுப்பும், வினோத் ராஜ்குமார் கலை இயக்க பணிகளையும் செய்ய உள்ளனர்.


இந்த படத்தின் சிறப்பு முன்னோட்டம் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என்று கவின் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிட்ட பதிவில் கவின் கூறி இருப்பதாவது:

வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.