close
Choose your channels

'மாஸ்டர்' முதல் காட்சியை பார்த்த விஜய் படங்களின் நாயகி!

Wednesday, January 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் இன்று படம் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய்யின் ரசிகர்களான திரையுலக பிரபலங்களும், விஜய்யுடன் நடித்த பல திரையுலகினர்களும் இன்று ’மாஸ்டர்’ படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ’மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் காட்சியை நடிகை கீர்த்தி சுரேஷூம் சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ’ஒரு வருடம் முழுவதும் காத்திருந்து தியேட்டருக்கு திரும்பி வருவது எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்க கூட முடியாது. ’மாஸ்டர்’ படத்தை பார்த்ததை விட சிறந்தது வேறு என்ன இருக்க முடியும்? என்று கூறியுள்ளார்.

தளபதி விஜய்யுடன் ’பைரவா’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்களில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.