close
Choose your channels

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Monday, October 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'ஜீவா' உள்ளிட்ட தரமான, வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிந்திரன். தற்போது 'சாம்பியன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள சுசீந்திரன் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளில் விறுவிறுப்பாக உள்ளார்.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. சற்றுமுன்னர் இந்த படத்திற்கு 'கென்னடி கிளப்' என்பது டைட்டிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பெண்கள் கபடி விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படமாகும். இயக்குனரின் முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு' ஆண்கள் கபடி விளையாட்டு குறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவாளராகவும், அந்தோணி படத்தொகுப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.

இந்த நிலையில் சுசிந்திரன் இயக்கிய 'ஜீனியஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.