close
Choose your channels

பாஜகவில் குஷ்பு: காங்கிரஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Monday, October 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கடந்த சில வாரங்களாக பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வலம் வந்துகொண்டிருந்தன. இந்த செய்திகளை அவ்வப்போது மறுத்து வந்த குஷ்பு இன்று பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான செய்தியை அவர் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் ஒரு மணிக்கு பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டா அவர்களை குஷ்பு சந்திக்க இருப்பதாகவும் அவரது முன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொள்ள குஷ்பு திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக குஷ்பு நேற்று இரவே டெல்லி சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் குஷ்பு சேர உள்ளதை அடுத்து காங்கிரஸ் மேலிடம் அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் தற்போது வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் என்ற பதவியில் இருந்து அவரை நீக்கம் செய்துள்ளது, இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.