close
Choose your channels
evp_raaga
kappan_us

'விஸ்வாசம்' வெற்றியால் சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நிறுவனம்!

Wednesday, August 21, 2019 • தமிழ் Comments

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்து மிகப்பெரிய லாபம் பெற்ற கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' என்ற படத்தை தயாரித்து வருகிறது

இந்த நிலையில் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் 'டபாங் 3' படத்தின் அனைத்து மொழி தமிழக ரிலீஸ் உரிமையை சல்மான்கான் நிறுவனத்திடம் இருந்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை கேஜேஆர் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

சல்மான்கான், சோனாக்சி சின்ஹா நடிப்பில் பிரபுதேவா இயக்கி வரும் 'டபாங் 3' திரைப்படம் இவ்வருடம் டிசம்பர் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Get Breaking News Alerts From IndiaGlitz