close
Choose your channels

பாஜக வேட்பாளர் ஆகும் இரண்டு தமிழ் நடிகைகள்?

Saturday, March 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதுமட்டுமன்றி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது. இந்த பட்டியலில் 2 தமிழ் நடிகைகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை குஷ்பு, சேப்பாக்கம் தொகுதியிலும், நடிகை கௌதமி ராஜபாளையம் தொகுதியிலும் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் போது பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.