close
Choose your channels

ஒரு வயது குட்டிப்பாப்பாவாக நயன்தாரா: வைரல் புகைப்படம்

Tuesday, July 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒரு வயது குட்டிப் பாப்பாவாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ் திரையுலகில் நம்பர் 1 நடிகை நயன்தாரா என்பதும் அவர் தான் தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதும் தெரிந்ததே. தற்போதும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இன்னும் ஓரிரு படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது அவரது அம்மா அவரை தூக்கி கொஞ்சும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் பல்வேறு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் ஒரு வயது குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.