close
Choose your channels

ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா.. ஹாட் உடையில் விருது பெறும் வீடியோ..!

Saturday, April 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா மும்பையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நயன்தாரா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் அது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா விருது பெறும் வீடியோவை அவரே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவின் செல்வாக்கு மிக்க 35 பிரபலங்களுக்கு GQ நிறுவனம் சார்பாக பலருக்கு விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த விருதுக்கு நயன்தாரா அழைக்கப்பட்டபோது ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா என்றும், தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்றும் தொகுப்பாளர் கூற, உடனே நயன்தாரா ஸ்டைலாக நடந்து வந்து விருதை பெரும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகை நயன்தாரா, ஷாருக்கானுடன் நடித்த பாலிவுட் திரைப்படமான ’ஜவான்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்தும் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் நயன்தாரா நடிக்கும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.