சிங்கிள் ஷாட் ஃபைட்.. ஸ்பாட் எடிட்டிங்.. முக்கிய அப்டேட் தந்த 'லியோ' நடிகர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இம்மாத இறுதியில் படத்தை சென்சாருக்கு அனுப்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ராமகிருஷ்ணன், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் ’இந்த படத்தில் ஒரு சிங்கிள் சாட் ஃபைட் சீன் இருப்பதாகவும், தளபதி விஜய் அதில் சூப்பராக நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கு இந்த படத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரும் காட்சி இருக்கிறது, தளபதி விஜயுடன் வரும் காம்பினேஷன் காட்சி புதிய அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
மேலும் ’நா ரெடி’ பாடலின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஸ்பாட்டிலேயே லோகேஷ் கனகராஜ் இந்த பாடலை எடிட்டிங் செய்து தளபதி விஜய் உள்பட அனைவருக்கும் போட்டு காட்டினார் என்றும் அதை பார்த்து நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம் என்றும் கூறினார்.இந்த படத்தில் இடம்பெற்ற காஷ்மீர் காட்சிகள் உண்மையிலேயே ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments