close
Choose your channels

'லியோ'வுக்கு இணையாக 'கங்குவா'வில் ஒரு காட்சி.. வேற லெவல் தகவல்,..!

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் ’லியோ’ மற்றும் சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ’லியோ’ படத்தை போலவே ’கங்குவா’ படத்தில் ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சி உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் ’நா ரெடி’ என்ற பாடல் 2000 நடன கலைஞர்களுடன் உருவாக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான இந்த படத்தின் சிங்கிள் பாடல் 2000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக தளபதி விஜய் நடனமாடி உள்ள காட்சிகள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படத்தில் 1500 நடன கலைஞர்களுடன் கூடிய பாடல் ஒன்று படமாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த பாடலும் ’லியோ’ படத்தின் பாடலுக்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.