close
Choose your channels

தனி திரைப்படமாகிறதா 'ரோலக்ஸ்'? ரசிகர்களிடம் சூர்யா பகிர்ந்த மாஸ் தகவல்..!

Sunday, August 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்கள் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டி இருப்பார் என்பதும் இந்த கேரக்டர் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பகுதியிலும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரோலக்ஸ் என்ற கேரக்டரை வைத்து தனி திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த சூர்யா தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

சூரியா சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாகவும், அவர் அப்போது தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த சில தகவல்களை கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

குறிப்பாக ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் குறித்து ரசிகர்களிடம் சூர்யா கூறிய போது எதிர்பார்ப்பை விட 100 மடங்கு இந்த படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் வரும் அக்டோபர் மாதம் ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகும் என்றும் ரசிகர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் ரோலக்ஸ் என்ற கேரக்டரை வைத்து ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கூறியதாகவும் அந்த கதை தன்னை ரொம்பவே பாதித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ‘ரோலக்ஸ்’ படம் முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அந்த படம் தான் ’இரும்பு கை மாயாவி’ என்றும் சூர்யா கூறியதாக தெரிகிறது.

மேலும் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு பின்னர் ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் இன்னும் சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு சூர்யா பல படங்களில் கமிட் ஆகி உள்ளது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.