close
Choose your channels

அஜித்தை இயக்குவது அவ்வளவு எளிது இல்லை: லோகேஷின் ஆச்சரியமான பதில்!

Sunday, July 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தை இயக்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என கேள்வி ஒன்றுக்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளிப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

திரையுலகிற்கு வரும் இயக்குனர்கள் அனைவரும் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் படங்களை இயக்க வேண்டும் என்ற கனவுடன் தான் வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து விஜய் நடிக்கும் ’தளபதி 67’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் அடுத்து அவர் அஜித் படத்தை இயக்குவாரா? என்ற கேள்வி செய்தியாளர்களிடம் இருந்து வந்தபோது, ‘அஜித்தை வைத்து படம் இயக்க எனக்கு ஆசையாகத்தான் உள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் அது அவ்வளவு எளிதாக நடக்கும் விஷயம் இல்லை என்றும் நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து நடிகர்களுடன் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என்றும் குறிப்பாக அஜித்துடன் பணி செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு பெரிய அளவில் உள்ளது என்றும் சரியான நேரம் வரும்போது அது நடைபெறும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். எனவே சரியான நேரம் வந்தால் அஜித் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறியிருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.