close
Choose your channels

ரஜினியின் '2.0' ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ தகவல்

Sunday, December 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் '2.0

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் இந்த படம் வரும் 2018, ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என்று லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சரியான ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. இதே ஆண்டில் ரஜினியின் 'காலா' படமும் ரிலீஸ் ஆகும் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு இரட்டை விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.