close
Choose your channels

'சிவா மனசுல சக்தி' இரண்டாம் பாகம் உருவாகிறதா? ஹீரோ யார் தெரியுமா?

Friday, April 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம் ராஜேஷ் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் ’சிவா மனசுல சக்தி’ என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் உள்பட பலர் நடித்திருப்பார்கள் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ஜீவா நாயகனாக நடிக்க இருப்பதாகவும், நாயகியாக பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் எம் ராஜேஷ் தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக அவர் ’சிவா மனசுல சக்தி’ படத்தின் இரண்டாம் பணியை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் முதுகெலும்பாக சந்தானம் கேரக்டர் இருந்தது என்ற நிலையில் அவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருவதால், இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தனக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தந்த ’சிவா மனசுல சக்தி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக சந்தானம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.