close
Choose your channels

விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.. பான் இந்திய திரைப்படமா?

Sunday, April 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள ’வீர தீர சூரன்’ என்ற படத்தின் மூன்று நிமிட வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த வீடியோ வைரலான நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பதையும் பார்த்தோம்.

’வீர தீர சூரன்’ படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல மலையாள நடிகர் சித்திக் நடிக்க இருப்பதாக தகவல் வழியாக உள்ளது.

இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஏராளமான மலையாள படங்களில் நடித்த நிலையில் தமிழிலும் ’சுபாஷ்’ ’ஜனா’ ’ரங்கூன்’ ’வைகை எக்ஸ்பிரஸ்’ ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ’வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் தற்போது அவர் ’வீர தீர சூரன்’ படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மேலும் சில அண்டை மாநில நட்சத்திரங்கள் இணைய இருப்பதால் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 100 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இதில் இரண்டு பாகங்கள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் ஆனால் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு விட்டு அதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து முதல் பாகத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் இந்த படம் ஒரு அதிரடி கேங்க்ஸ்டர் படம் என்று ஆனால் அதே நேரத்தில் ஆக்‌ஷனை தவிர இந்த படத்தில் எதிர்பார்க்காத சில அம்சங்களும் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.