close
Choose your channels

விஜய், சிம்பு படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், சிம்பு, உதயநிதி நடித்த படங்கள் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகர் கோட்டயம் பிரதீப் என்பவர் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகரும் தமிழில் சிம்பு நடித்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆர்யா நடித்த ’ராஜாராணி’ உதயநிதி நடித்த ’நண்பேன்டா’ விஜய் நடித்த ’தெறி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்தவர் நடிகர் கோட்டயம் பிரதீப். இவர் சற்று முன்னர் மாரடைப்பால் காலமானதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் கோட்டயம் பிரதீப் அவர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமான இவர் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் பிரதீப்க்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.