close
Choose your channels

இந்த அரசியல்வாதியை ஃபாலோ செய்யுங்கள்.. த்ரிஷாவுக்கு மணிரத்னம் போட்ட உத்தரவு..!

Friday, April 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் இந்த படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷாவுக்கு ஒரு முக்கிய அரசியல்வாதியை ஃபாலோ செய்யும் படி மணிரத்னம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகை த்ரிஷா நடித்த குந்தவை கேரக்டர் என்பது அழகும் அறிவும் சேர்ந்த ஒரு ராஜதந்திர கேரக்டர். சோழ சாம்ராஜ்யத்தை காப்பாற்றும் பொறுப்பு ஒரு கட்டத்தில் குந்தவை கையில் இருக்கும் என்பதும் அதை அவர் புத்திசாலித்தனமாக செயல்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் சகோதரர் ஆதித்த கரிகாலனை கொல்வதற்கு நந்தினி செய்யும் சதித்திட்டம், இன்னொரு பக்கம் சோழர்களை பழிவாங்க காத்திருக்கும் பாண்டியர்களின் கூட்டம், அருள்மொழிவர்மனுக்கு வரும் ஆபத்து ஆகியவற்றை தடுப்பதில் குந்தவையின் பங்கு தான் அதிகம் என்பதும் குந்தவை தான் இந்த படத்தின் அரசியல் மற்றும் ராஜதந்திரங்களுடன் உலா வரும் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குந்தவை கதாபாத்திரத்தை த்ரிஷாவிடம் கொடுக்கும் போது மணிரத்னம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஃபாலோ செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு கம்பீரமான அரசியல்வாதி என்பதும் சரியோ தவறோ ஒரு முடிவை அவர் தீர்க்கமாக எடுப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அத்தகைய ஜெயலலிதாவின் வீடியோவை அடிக்கடி பார்த்து அவருடைய உடல் மொழியை ஃபாலோ செய்து கொள்ளுங்கள் எனவும் அப்போதுதான் குந்தவை கேரக்டர் முழுமையாக உங்களை வந்தடையும் என்றும் மணிரத்னம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.



‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் த்ரிஷாவின் குந்தவை கேரக்டரின் நடிப்பை பார்க்கும் போது அவர் முன்னாள் முதல் ஜெயலலிதாவை மிகச் சரியாக ஃபாலோ செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos