close
Choose your channels

'அஜித் 61' படத்தில் நடிப்பது உண்மையா? மஞ்சுவாரியர் அளித்த பதில்!

Sunday, May 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகையும் தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் நடித்தவருமான மஞ்சுவாரியர் ‘அஜித் 61’ படத்தில் நடிப்பது உண்மையா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அஜித் நடித்து வரும் ’அஜீத் 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகி யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் சமீபத்தில் நடிகை மஞ்சுவாரியார் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது

இந்த நிலையில் சமீபத்தில் கேரள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மஞ்சுவாரியார் ’அஜித் 61’ படத்தில் நடிப்பது உண்மைதான் என்றும் இந்த படம் நல்ல பிராஜக்ட் என்றும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது என்றும் படக்குழுவினர் அனைவரையும் எனக்கு பிடித்து இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அஜித் 61 படத்தில் மஞ்சுவாரியார் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி கேரக்டரில் நடித்த ஜான் கொகேன் ‘அஜித் 61’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos