close
Choose your channels

கமல் பட ரெஃபரன்ஸ் ஆக இருந்தாலும் ரஜினியிடம் வாழ்த்து: 'மஞ்சும்மெல் பாய்ஸ்' குழுவுடன் சூப்பர் ஸ்டார்..!

Saturday, March 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசனின் ’குணா’ படத்தின் ரெஃப்ரன்ஸ் உடன் வந்த ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் கேரளாவை விட தமிழகத்தில்தான் இந்த படம் அதிக வசூல் செய்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து தமிழகத்திற்கு வந்த இந்த படத்தின் குழுவினர் முதல் முதலாக கமல்ஹாசனை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

அதன் பிறகு பல திரையுலக பிரபலங்களை சந்தித்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்’ குழுவினர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படக்குழுவினரை பார்க்க விரும்புவதாக வெளியான தகவலை அடுத்து இந்த சந்திப்பு இன்று நடந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு சுவாரசியமான உரையாடல்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே ஒரு நல்ல படம் வெளியானால் அந்த படத்தின் குழுவினர்களை அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவிப்பதில் தவறுவதில்லை. அந்த வகையில் அண்டை மாநில படமாக இருந்தாலும் அவர்களையும் அழைத்து தனது வாழ்த்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.