close
Choose your channels

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட்.. படப்பிடிப்பு எப்போது?

Monday, July 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ’வாழை’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்க போகிறார் என்று ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன.

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் பிரபல தமிழக கபடி வீரர் கணேஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது. இவர் தூத்துக்குடி அருகே உள்ள சிறு கிராமத்தில் பிறந்து, தேசிய, ஆசியா அளவிலான கபடி விளையாட்டில் சாதனை புரிந்துள்ளார். மேலும் இவரை மத்திய அரசு கெளரவித்து அர்ஜூனா விருது வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 90களில் பின்னணிகள் இந்த படம் உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக துருவ் விக்ரம் கபடி பயிற்சியில் சில மாதங்கள் இருந்தார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.