close
Choose your channels

மாஸ் நடிகருக்கு கொரோனா பாசிட்டிவ்: ரசிகர்கள் அதிர்ச்சி

Tuesday, December 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய ’மகதீரா’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ராம்சரண்தேஜா. தற்போது ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் ராம்சரண் உடல்நல குறைவுடன் இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் ராம்சரண் தேஜா தனது சமூக வலைத்தளத்தில் ’தனக்கு கோவிட் 19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளதாகவும், இதனால் தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்த கொண்டிருப்பதாகவும், விரைவில் குணமாகி விடுவேன் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து ராம்சரண் தேஜாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.