close
Choose your channels

விடா கிளாமருக்கு கிடைத்த பலன்.. 40 வயதில் நாயகி கேரக்டரில் மீரா ஜாஸ்மின்.. டைட்டில் அறிவிப்பு..!

Monday, April 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழ் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின் என்பதும் விஜய், விஷால், மாதவன் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிரடியாக கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இந்த கிளாமருக்கு கிடைத்த பலனாக தற்போது அவர் ஒரு மலையாள திரைப்படத்தில் நாயகி ஆக ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல மலையாள, தமிழ் நடிகர் நரேன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு ’குயின் எலிசபெத்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல மலையாள இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அதில் மீரா ஜாஸ்மின் அட்டகாசமான போஸ் கொடுத்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து மீரா ஜாஸ்மினுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.