close
Choose your channels

திருமணத்தால் விலகிய விஜய்சேதுபதி பட நாயகி: இடத்தை பிடித்த மேகா ஆகாஷ்!

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் காரணமாக ஒப்பந்தமாகி இருந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி பட நாயகி விலகியதை அடுத்து அந்த படத்தின் வாய்ப்பை நடிகை மேகா ஆகாஷ் கைப்பற்றிய தகவல் தற்போது வந்துள்ளது

இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த ஸ்வாதினி என்பவர் இயக்கும் முதல் படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நிஹாரிகா என்ற நடிகை ஒப்பந்தமாகியிருந்தார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது வரும் அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் டிசம்பரில் நிஹாரிகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து இந்த படத்தில் தற்போது மேகா ஆகாஷ் இணைந்துள்ளார். இந்த படம் ஒரு போட்டோகிராபருக்கும் நடனக்கலைஞருக்கும் இடையே நடக்கும் காமெடி கலந்த ரொமான்ஸ் கதையம்சம் கொண்டது என்று இயக்குனர் ஸ்வாதினி தெரிவித்துள்ளார்

அக்டோபர் 27-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அசோக் செல்வன் மற்றும் மேகா ஆகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நல்ல முறையில் ஒர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இயக்குனர் ஸ்வாதினி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.