close
Choose your channels

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிரபல கவர்ச்சி நடிகை?

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் 'தர்மபிரபு. எமலோகத்தில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ராதாரவி எமனாகவும், எமனின் மகனாக யோகிபாபுவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இதே படத்தில் இன்னொரு கவர்ச்சி நடிகையான மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. யோகிபாபுவுடன் மேக்னா நாயுடு ஆடும் நடனக்காட்சி ஒன்றும் இந்த படத்தில் இருப்பதால் இருவரும் ஜோடியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது

முத்துக்குமரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.