close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பக்கா மாஸ்' பாடல் விரைவில்

Tuesday, August 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதன்முதலாக மூன்று வேடங்களில் விஜய் நடித்து வரும் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் அதற்கு முன்பே விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பக்கா மாஸ் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

நேற்று 'விவேகம்' படத்தின் பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், விஜய் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்த தகவல் வெளிவந்ததால் நேற்றைய சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்களின் ஆனந்தத்தை பார்க்க முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.