close
Choose your channels

தளபதி விஜய்யின் 'மெர்சல்' டீசர் விமர்சனம்

Thursday, September 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும்
நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்

என்ற அட்டகாசமான வசனத்துடன் ஆரம்பமாகும் 'மெர்சல்' பட டீசர் முதல் நொடியில் இருந்து 75 வினாடிகள் முடியும் வரை அட்டகாசமாக விஷூவல் விருந்தாக உள்ளது. பழமையும் புதுமையும் மாறி மாறி வரும் காட்சிகள், பழங்கால செட்களும், வெளிநாட்டு பிரமாண்டமான காட்சிகளும் மாறி மாறி வரும்போது இரண்டையும் இணைக்கும் ஒரு புள்ளி படத்தில் இருக்கும் என்பது உறுதியாகிறது.

குறிப்பாக விஜய்யின் கிராமத்து தோற்றம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் திருப்தியை அளிக்கும் வகையில் உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள், பிரமாண்டமான கலை இயக்குனரின் செட்டுக்கள், ஆஸ்கார் நாயகனின் அமர்க்களமான பின்னணி இசை, ஒளிர வைக்கும் ஒளிப்பதிவு என அனைத்து துறையினர்களின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.

மேலும் விஜய்யின் மேஜிக் காட்சிகள், சீட்டுக்கட்டிலேயே ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவை இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத புதுமை

மொத்தத்தில் 'மெர்சல்' டீசர் ரசிகர்களை மெஸ்மெரிசம் செய்ய வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.