close
Choose your channels

விஜய், அஜித்துக்கு அது செட்டாகாது.. மைக் மோகன் கருத்து!

Monday, January 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினி ஒருவருக்கு மட்டுமே என்றும் அந்த பட்டம் விஜய் அஜித்துக்கு செட் ஆகாது என நடிகர் மைக் மோகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் பட்டம் கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த்துக்கு அவரது ரசிகர்கள் கொடுத்துள்ள நிலையில் திடீரென தற்போது சூப்பர் ஸ்டார் விஜய் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் கூறியதை அடுத்து ஒரு சிலர் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் விஜய் தான் தற்போதைய வசூல் மன்னன் என்றும், எனவே அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிறிய திரையரங்க திறப்பு விழாவில் நடிகர் மைக் மோகன் கலந்து கொண்டார். அவர் மாணவர்களிடம் பேசியபோது பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அவர் கருத்து தெரிவித்த போது, ‘அஜித் விஜய் ஆகிய இருவருமே சூப்பர் ஸ்டார்கள் தான், ஆனால் பட்டம் என்று வரும்போது அது ரஜினி சாருக்கு மட்டும்தான் பொருந்தும், அந்த பட்டம் அவருக்காகவே கொடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது இயக்குனரின் கையில் தான் இருக்கிறது என்றும் நல்ல கதை இருந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.