close
Choose your channels

விஜய்க்கு ஜோடியாகும் நண்பனின் நாயகி?

Wednesday, November 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக விஜய் படம் ஒன்றின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்திருக்கும்போதே அடுத்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் முடிவாகி விடு வதுண்டு.

ஆனால் இம்முறை 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துள்ள நிலையில் இன்னும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்துள்ள தகவலின்படி விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை 'வீரம்' உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த வாஹினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு சுவாரஸியமான தகவலாக 'விஜய் 60' படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யுடன் 'நண்பன்' படத்தில் இலியானா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.