close
Choose your channels

நாளை முதல் தியேட்டர்கள் திறப்பு: என்னென்ன படங்கள் ரிலீஸாகும்?

Sunday, August 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் திறக்காமல் இருந்த நிலையில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் 20க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி நடித்த ’மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’ மற்றும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆகிய படங்கள், மிர்ச்சி சிவா நடித்த ’சுமோ’ மற்றும் ‘இடியட்’ ஆகிய படங்கள், பிரபுதேவாவின் ’பாஹீரா’, அசோக் செல்வன் நடித்த ‘ஹாஸ்டல்’ ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ’சிவகுமாரின் சபதம்’ அதர்வாவின் ’ஒத்தைக்கு ஒத்த’ காஜல் அகர்வாலின் ‘கருங்காப்பியம்’, சாந்தனு பாக்கியராஜ் நடித்த ’முருங்கைக்காய் சிப்ஸ்’, சந்தானத்தின் ’சபாபதி’ மோகன் ஜி இயக்கிய ’ருத்ரதாண்டவம்’ அருண் விஜய் நடித்த ’அக்னி சிறகுகள்’ மற்றும் ’சினம்’ சசிகுமார் நடித்த ’ராஜவம்சம்’, ‘கொம்பு வச்ச சிங்கம்’ மற்றும் எம்ஜிஆர் மகன், எஸ்ஜே சூர்யா நடித்த ’பொம்மை’ விஜய் ஆண்டனி நடித்த ’தமிழரசன்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேலும் கவின் நடித்த ’லிப்ட்’ லாஸ்லியா நடித்த ’பிரண்ட்ஷிப்’ ஆர்கே சுரேஷ் நடித்த ’விசித்திரன்’ பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’குதிரைவால்’ ஜிவி பிரகாஷ் நடித்த ’ஜெயில்’ மற்றும் ’ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிவகார்த்திகேயன் ’டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகி விட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.