close
Choose your channels

2020ல் டுவிட்டரில் பிரபலமான நடிகை யார்? லிஸ்ட்லேயே இல்லாத நயன்தாரா!

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2020 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகமாக பிரபலமான திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வந்தோம். குறிப்பாக தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் டுவிட்டரில் அதிகளவு பேசப்பட்டதாகவும் விஜய்யின் நெய்வேலி செல்பி புகைப்படம் அதிக ரீடுவிட் செய்யப்பட்டதாகவும், சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் ஹேஷ்டாக் அதிகமாக பயன்படுத்தப்பட்டதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகைகளில் அதிகமாக டுவிட்டரில் புகழ்பெற்ற, பேசப்பட்டவர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் மிக அதிகமாக டுவிட்டரில் டுவிட் செய்யப்பட்டவர் கீர்த்தி சுரேஷ் என்று டுவிட்டர் அறிவித்துள்ளது

கீர்த்தி சுரேஷை அடுத்து காஜல் அகர்வால், சமந்தா, ராஷ்மிகா, பூஜாஹெக்டே, தமன்னா, ரகுல் பிரீத்தி சிங், ஸ்ருதிஹாசன் மற்றும் த்ரிஷா ஆகியோர் 2020 ஆம் ஆண்டில் அதிகமாக டுவிட்டரில் பேசப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது

தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் நயன்தாரா இந்த லிஸ்டிலேயே இல்லாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.