close
Choose your channels

'மைனா' சூசனுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

Monday, November 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபு சாலமன் இயக்கிய மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அமலா, தம்பி ராமையா உள்பட ஒருசில நட்சத்திரங்கள் பிரபலமானார்கள் என்று தெரிந்ததே. அதேபோல் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை சூசனுக்கும் இந்த படத்தை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகை சூசன் ஒரு சிறுவனுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் அவர் சூசனின் மகனா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

‘மைனா’ வெற்றிப்படத்தை அடுத்து நடிகை சூசன் ’நண்பேன்டா’ ’ராட்சசன்’ உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அதேபோல் ’ஆபீஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடர் உள்பட பல தொடர்களில் நடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சூசனுடன் ஒரு சிறுவன் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த சிறுவன் சூசனின் மகன் என்று கூறப்படும் நிலையில் சூசனுக்கு எப்போது திருமணம் நடந்தது? அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.