close
Choose your channels

அந்த இயக்குனர் இன்னும் 40 வருஷங்கள் படம் இயக்குவார்.. மிஷ்கின் வாழ்த்து..!

Tuesday, May 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் ’அந்த இயக்குனர் இன்னும் 30 முதல் 40 வருடங்களுக்கு படத்தை இயக்குவார்’ என வாழ்த்து தெரிவித்திருப்பது கோலிவுட் திரையுலகினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் மிஷ்கின் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பதும் விஜய் நடித்து வரும் ’லியோ’ உள்பட பல படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் மிஷ்கின் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியபோது, ‘மாவீரன்’ படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பை படப்பிடிப்பை முடித்து விட்டேன், இந்த படம் நிச்சயம் அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் ’மாவீரன்’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் மிகவும் புத்திசாலி, அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு அவர் படங்களை இயக்குவார் என்று தெரிவித்தார்.

யாராவது அவர் இயக்கிய ஷாட்டை மாற்ற சொன்னால் அவர் மாற்ற மாட்டார் என்றும் இயக்குனராக அவருடைய சொந்த கண்ணோட்டத்துடன் தான் படத்தை இயக்கி வருகிறார் என்றும் அந்த மனோபாவத்தை நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மிஷ்கின் வாயால் வாழ்த்து பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.