close
Choose your channels

தமிழ் நடிகையை டுவிட்டரில் பிளாக் செய்த நக்மா! என்ன காரணம்?

Sunday, July 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவரும் தற்போது காங்கிரஸ் பிரமுகராக இருந்து வரும் நடிகையுமான நக்மா, தமிழ் நடிகை சுஜானா ஜார்ஜை டுவிட்டரில் பிளாக் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

’மைனா’ திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ஒருசில திரைப்படங்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடர் உள்பட ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் சுஜானா ஜார்ஜ். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது காமெடியுடன் கூடிய பதிவுகளை பதிவு செய்து வருவார். இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு நடிகையும் அவரது முன்னாள் காதலியுமான நக்மா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த பிறந்தநாள் வாழ்த்து குறித்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை பதிவு செய்து வந்தனர். அந்த வகையில் நக்மாவின் வாழ்த்து டுவிட்டில் சுஜானாவின் முறைக்கும் புகைப்படத்தை இணைத்த மீம்ஸ் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதில் சுஜானாவை கங்குலியின் மனைவி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நக்மா அவரை பிளாக் செய்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சுஜானா கூறியபோது, ‘ஒரு மிகச்சிறந்த நடிகை, நான் ரசிக்கும் ஒரு நடிகை என்னை பிளாக் செய்தது பெருமையாக உள்ளது. ’என்னை நிறைய பேருக்கு பிடிக்காதுன்னு தெரியும். ஆனால் என்னை மக்கள் இவ்வளவு வெறுப்பாங்கன்னு நினைக்கல. பெரிய விசில் அடிங்க’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுஜானாவுக்கு ஆதரவாக பல கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.