close
Choose your channels

பிறந்த நாள் அன்று 'வேலைக்காரன்' படம் பார்த்த 92 வயது அரசியல்வாதி

Wednesday, December 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, எளிமைக்கு உதாரணமானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. இவர் நேற்று தனது 92வது பிறந்த நாளை மிக எளிதாக கொண்டாடினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தை நேற்று நல்லக்கண்ணு பார்த்தார். கம்யூனிச கருத்துக்கள், பல காட்சிகள் சிகப்பு கொடிகள் உள்ள ஒரு படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் பார்க்க வந்தது மிகப்பொருத்தமாக கருதப்பட்டது

படம் பார்த்த தோழர் நல்லக்கண்ணு படக்குழுவினர்களை வாழ்த்தியதாகவும், இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.