close
Choose your channels

பிரபல நடிகரின் படத்திலிருந்து கௌதம் மேனன் விலகலா? பரபரப்பு தகவல் 

Saturday, December 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் அடுத்த படமான ‘எப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த செய்தியை விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்ததோடு ’கௌதம் மேனன் தான் நடிக்கும் படத்தில் இணைவது தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கௌதம் மேனன் நடிக்கவிருந்த இன்னொரு படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிபிராஜ் நடித்து வரும் போலீஸ் திரைப்படமான ’வால்டர்’ என்ற திரைப்படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்கவிருந்த கௌதம் மேனன் விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக நட்டி நடராஜ் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

சிபிராஜ், சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, ஷிரின் கான்ச்வாலா, சார்லி உள்பட பலர் நடித்து வரும் ‘வால்டர்’ திரைப்படத்தை அன்பரசன் இயக்கி வருகிறார். தர்மபிரகாஷ் இசையில், ராசாமதி ஒளிப்பதிவில் இளையராஜா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.