close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, March 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்துடன் 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் படத்துடன் இந்த ஆண்டை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. வரும் 28ஆம் தேதி 'ஐரா', மே 1ஆம் தேதி 'மிஸ்டர் லோக்கல்' அதனையடுத்து 'கொலையுதிர்க்காலம்' என அடுத்தடுத்து நயன்தாராவின் படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வந்த மலையாள திரைப்படமான 'லவ் ஆக்சன் டிராமா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் ஓணம் பண்டிகையில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் மாதம் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'நேரம்' நாயகன் நிவின்பாலி, நயன்தாரா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஷான் ரஹ்மான் இசையில் ஜான் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பண்டாஸ்டிக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.