close
Choose your channels

பிரபாஸ் அடுத்த படத்தில் நயன்தாரா உள்பட 3 பிரபலங்கள்.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

Thursday, September 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் உடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும் நிலையில் தற்போது அவர் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பிரபாஸ் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம் ’கண்ணப்பா’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகயிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் சிவன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக பார்வதி கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் பிரபல நடிகர்கள் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும், விஷ்ணு மஞ்சு உட்பட ஒரு சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருப்பதாகவும் இந்திய திரை உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தில் இணைய போவதாகவும் கூறப்படுவதால் திரையுலகம் ஆச்சரியத்தில் உள்ளது.

ஏற்கனவே பிரபாஸ் நடிக்க உள்ள வரும் கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருக்கும் நிலையில் ’கண்ணப்பா’ திரைப்படமும் அவரது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.