close
Choose your channels

உயிர் - உலகம் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன் - விக்கி: வைரல் புகைப்படம்

Sunday, December 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த இரட்டை குழந்தைகளுடன் நயன் - விக்கி தம்பதிகள் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பதும் இது குறித்த அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நயன் - விக்கி மற்றும் அவர்களது இரட்டை குழந்தைகள் கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படம் விக்னேஷ் சிவனின் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உயிர், உலகம் நயன்தாரா மற்றும் விக்கி குடும்பத்தின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் என விக்னேஷ் சிவன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரது புகைப்படத்துடன் கூடிய பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் ‘மிகுதியான அன்பு! நீங்கள் எப்போதும் கனவு காணும் வாழ்க்கை வாழ அனைவருக்கும் எல்லா மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களை தர கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்’ என்று விக்னேஷ் சிவன் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.